Thursday 28 April 2011


அசோகா அல்வா

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு               1 கப்
பயத்தம்பருப்பு                 1/2 கப்
நெய்                          1/2 கப்
சர்க்கரை                      2 கப்      
பட்டை,ஜாதிக்காய்,ஏலம்        1 டீஸ்பூன் 
(பொடி செய்தது)
முந்திரி                       1/2 கப் 
(அல்லது தேவையான அளவு)
கேசரி கலர் பௌடர்           1 சிட்டிகை

பயத்தம் பருப்பை ப்ரெஷர் குக்கெரில் 4 விசில் வரும்வரை வேக விடவும்
ஒரு கடாயில் சிரிதளவு நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறரமாக வருத்தெடுக்கவும்.

பிறகு கோதுமை மாவை லேசாக வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்

வேக வைத்த பயத்தம் பருப்புடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி சர்க்கரை கரைந்ததவுடன் கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து  நன்றாக வெந்தவுடன் மீதமுள்ள நெய்யை சேர்த்து , நெய் தனியாக பிரிந்து வரும் வரை அல்வாவை நன்கு கிளரவும்.

கலர் தேவையெனில் கேசரி பௌடரை சேர்த்து கொள்ளலாம்

தேவையெனில் நெய் சிறிது அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

சூடாக பறிமாரவும்.

ஒரு வாரம்வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.